உள்ளூர் செய்திகள்
தா.பேட்டையில் வளர்ச்சி திட்டபணிகளை காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

ரூ.3.50 கோடியில் வாரசந்தை - பேருந்து நிலையம் கட்டுவதற்கு பூமிபூஜை

Published On 2022-05-03 14:54 IST   |   Update On 2022-05-03 14:54:00 IST
ரூ.3.50 கோடியில் வாரசந்தை மற்றும் பேருந்து நிலையத்திற்கு பூமிபூஜை நடைபெற்றது.
திருச்சி:

தா.பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே கலைஞர் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வாரசந்தை மேம்பாடு ரூ 1.92 கோடி மதிப்பீட்டிலும், புதிய பேருந்து நிலையம் மேம்பாடு செய்யும் பணிக்காக ரூ1.51 கோடி மதிப்பிலும் பணிகள் துவங்குவதற்கான பூமி பூஜை  நடைபெற்றது.

 விழாவில் முசிறி தொகுதி எம்.எல்.ஏ காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமை வகித்து பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

Similar News