உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்குப்பின் பெண் உயிரிழப்பு

Published On 2022-05-03 14:51 IST   |   Update On 2022-05-03 14:51:00 IST
தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்குப்பின் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது மகளான ஸ்வேதா (வயது24) என்பவரை, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து ஸ்வேதா கருவுற்றிருந்த நிலையில் அவரது வயிற்றில் இருந்த 7 மாத குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 30ம் தேதி மருத்துவர்கள் ஸ்வேதாவின் வயிற்றில் இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, குழந்தையை வென்டிலேட்டரில் வைப்பதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த ஸ்வேதாவிற்கு நேற்று திடீரென வலிப்பு ஏற்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சுவேதாவின் உடலை துறையூர் போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் அருகே இளம்வயது பெண் பிரசவத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News