உள்ளூர் செய்திகள்
நெமிலி பனப்பாக்கம் பகுதியில் நள்ளிரவில் இடியுடன் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி
நெமிலி பனப்பாக்கம் பகுதியில் நள்ளிரவில் இடியுடன் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவேரிப்பாக்கம் மற்றும் பல பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து ஓரளவிற்கு வெப்பக்காற்று மற்றும் சூடான சூழல் மாறி இருக்கிறது.
இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.