உள்ளூர் செய்திகள்
பெண் ஒருவருக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் மருந்து பெட்டகத்தை வழங்கியபோது எடுத்தபடம்

ஊரப்பாக்கத்தில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்-அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார்

Published On 2022-05-02 08:17 GMT   |   Update On 2022-05-02 08:17 GMT
கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவர பட்ட திட்டம். இது 2011ம் ஆண்டு வரை செயல்பட்டு கொண்டிருந்தது.

வண்டலூர்:

ஊரப்பாக்கத்தை அடுத்த கிளாம்பாக்கத்தில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு வரும் முன்காப்போம் திட்ட முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவர பட்ட திட்டம். இது 2011ம் ஆண்டு வரை செயல்பட்டு கொண்டிருந்தது. அதற்கு பின் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.வினர் இத்திட்டத்தை கைவிட்டனர். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் சுகாதாரத்தில் அதிக கவனம் காட்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் முன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார்.

இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் இந்த மாதிரியான முகாம்களை பயன்படுத்தி கொண்டு சுகாதாரமான வாழ்க்கை வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், ஒன்றிய செயலாளர் ஆராவமுதன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய தலைவர் உதயா கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊரப்பாக்கம் பவானி கார்த்தி, துணை தலைவர் ரேகா கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், சாய் கிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News