உள்ளூர் செய்திகள்
நகராட்சி கூட்டம் தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Published On 2022-04-30 15:16 IST   |   Update On 2022-04-30 15:25:00 IST
கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கடையநல்லூர்:

கடையநல்லூர் நகரசபை கூட்டம்  தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

துணைத்தலைவர் ராசையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், என்ஜினீயர்   ஸ்டான்லி  ஜெபசிங், சுகாதார அலுவலர் இளங்கோ உதவிப்பொறியாளர் ரவிச்சந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார்,   நகராட்சி ஆய்வாளர் சக்திவேல், இளநிலை உதவியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  29 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடையநல்லூர் நகரில் தெருக்களில் ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்டுள்ள வீட்டின் படிக்கட்டுகளை அகற்ற வேண்டும்.

அல்லது நகராட்சி வருவாயைப் பெருக்கும் விதத்தில் அந்த ஆக்கிரமிப்பு  படிகளுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என முஸ்லிம்லீக்  19-வார்டு கவுன்சிலர்  அக்பர் அலி தெரிவித்தார்.

 சுகாதார சீர்கேடு விளைவிக்கும் விதத்தில் நகரின் பல பகுதிகளில் பன்றி வளர்க்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என 3-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சுபா ராஜேந்திர பிரசாத் பேசினார்.  

வாறுகால் சுத்தம் செய்யப்பட வேண்டும் என 20-வது வார்டு எஸ்.டி.பி.ஐ. கவுன்சிலர் யாசர்கான் பேசினார்.   கூட்டத்தில்  மொத்தம்  29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News