உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை:
வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடையை மூடி வைக்க வேண்டும்.
அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்பந் தப்பட்ட மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.