உள்ளூர் செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் ரூ.16.2 கோடி மதிப்பில் 103 தடுப்பணைகள்
Erode News 163 crore worth 103 dams in Erode district, ஈரோடு மாவட்டத்தில் ரூ.16.2 கோடி மதிப்பில் 103 தடுப்பணைகள்
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சி க்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட த்தின்கீழ் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-
இயற்கை வள மேம்பாட்டு ப்பணி மற்றும் நீர்ப்பாது காப்பு சார்பில் தடுப்பணைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. தடுப்பணை கட்டும் பணியினை மேற்கொள்வ தால் நிலத்தடிநீர் மட்டம் உ யர்ந்து விவசாய நிலங்களுக்கு மிகவும் பயனள்ளதாக அமைகின்றது.
ஈரோடு மாவட்டத்தில் 2021-2022-ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அம்மாபேட்டை வட்டாரத்தில் ரூ.285.50 லட்சம் மதிப்பீட்டில் 16 தடுப்பணைகள், அந்தியூர் வட்டாரத்தில் ரூ.281.23 லட்சம் மதிப்பீட்டில் 23 தடுப்பணைகள்,
பவானி வட்டாரத்தில் ரூ.112.70 லட்சம் மதிப்பீட்டில் 9தடுப்பணைகள், கோபி வட்டாரத்தில் 90 லட்சம் மதிப்பீட்டில் 4 தடுப்பணைகள்,கொடுமுடி வட்டாரத்தில் ரூ.8.43 லட்சம் மதிப்பீட்டில் 2 தடுப்பணைகள், மொடக்கு றிச்சி வட்டாரத்தில் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் 4 தடுப்பணைகள்,
சென்னிமலை வட்டாரத்தில் ரூ.49.88 லட்சம் மதிப்பீட்டில் 1 தடுப்பணை, நம்பியூர் வட்டாரத்தில் ரூ.133.92 லட்சம் மதிப்பீட்டில் 14 தடுப்பணைகள், பெருந்துறை வட்டாரத்தில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் 4 தடுப்பணைகள், தாளவாடி வட்டாரத்தில் ரூ.446.67 லட்சம் மதிப்பீட்டில் 21 தடுப்பணைகள்,
தூக்க நாயக்கன்பாளை யம் வட்டாரத்தில் ரூ.87.61 லட்சம் மதிப்பீட்டில் 5 தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கு அனுமதி பெற்று பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் 11 வட்டாரங்களில் ரூ.1601.95 லட்சம் மதிப்பீட்டில் 103 தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் மலைப் பகுதி யானஅந்தியூர் வட்டாரம் பர்கூர் ஊராட்சியில் 21 தடுப்பணைகள் கட்டும் பணிகளும் மற்றும் தாளவாடி வட்டாரத்தில் 21 தடுப்பணைகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த ஆய்வி ன்போது அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.