உள்ளூர் செய்திகள்
மரவள்ளிக்கிழங்கில் மெழுகுவண்டு தாக்கும் அபாயம்
மொடக்குறிச்சி வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கில் மெழுகுவண்டு தாக்கும் அபாயம் குறித்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மேகலா அறிக்கை ெவளியிட்டுள்ளார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கில் மெழுகுவண்டு தாக்கும் அபாயம் குறித்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மேகலா அறிக்கை ெவளியிட்டுள்ளார்.
மொடக்குறிச்சி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மேகலா மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக் கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மொடக்குறிச்சி வட்டாரத்தில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். தற்போது மரவள்ளி கிழங்கை மெழுகுவண்டு தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மெழுகுவண்டானது பகல் நேரத்தில் வேம்பு, கருவேலம், பீயமரம் போன்ற மரங்களில் அதிகமாக காணப்படுகிறது. இதன் புழு பருவம் கரும்பு, நிலக்கடலை, கம்பு, ராகி போன்ற சல்லிவேர் கொண்ட பயிர்களில் வேரை தாக்கும் பண்புடையது.
இந்த மெழுகு வண்டா னது தற்போது சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பரவ வாய்ப்புள்ளதால் விவசாயிகள் முன்னெச் சரிக்கை யாக தடுப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கோடை உழவு செய்தல், பிவேரியா பேசியான பூஞ்சாணத்தை ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இட வேண்டும். பின்னர் ஒருமாத இடைவெளியில் மீண்டும் ஒருமுறை 1 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடவேண்டும்.
மெழுகுவண்டு வயலில் தென்பட்டவுடன் 8 அடி உயரத்தில் பெட்டர்மாஸ் லைட் அமைத்து தார்பாலின் விரித்து வண்டுகள் சேகரித்து குலோர்பை ரிபாஸ் லிட்டருக்கு 5 மில்லி என்ற அளவில் கலந்து வைத்துள்ள நீரில் இட்டு அழித்தில் வேண்டும் அல்லது தீயிலிட்டு அழித்தல் வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு மொடக் குறிச்சி வட்டார தோட்டக் கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.