உள்ளூர் செய்திகள்
பள்ளிகளில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
நடைபெற்றது.
கொரோனா தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தொடர்ந்து உருமாற்றம் அடைந்த கொரோனா தாக்கத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்றும் வகையில் முதல் கட்டமாக 15 வயது முதல் 18 வயதுடைய மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. அதைத் தொடர்ந்து 12 முதல் 15 வயது உடைய மாணவ, மாணவி களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வந்தது
.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவ ர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் 12 முதல் 14 வயது உடைய மாண வர்களுக்கு முதல் தவணையாக 44,710 தடுப்பூசி களும், 2-வது தவணையாக 13,268 தடுப்பூசிகளும் செலுத்த ப்பட்டுள்ளன. இதுபோல் 15 முதல் 18 வயதுடைய பள்ளி மாண வர்களுக்கு முதல் தவணையாக 89,373 தடுப்பூசிகளும், 2-வது தவணையாக 77,321 தடுப்பு களும் இது வரை செலுத்த ப்பட்டுள்ளன.
இந்நிலை யில் ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளி மாணவ ர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 304 பள்ளிகளில் 281 மருத்துவக் குழுக்களால் 12 வயது முதல் 15 வயது உடைய மாணவ- மாணவிகள், 15 முதல் 18 வயதுடைய மாணவ மாணவிகளுக்கு என மொத்தம் 20 ஆயிரத்து 103 மாணவ மாணவிகளுக்கு இன்று தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மாணவ- மாணவிகள் இன்று நடந்த முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்து கொண்டனர். இதேபோல் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர்.