உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

குடியிருப்பு பகுதியில் 8½ அடி பாம்பு சிக்கியது

Published On 2022-04-28 15:25 IST   |   Update On 2022-04-28 15:25:00 IST
சென்னிமலை அருகே குடியிருப்பு பகுதியில் 8½ அடி பாம்பு சிக்கியது.
சென்னிமலை:

சென்னிமலை அருகே குடியிருப்பு பகுதியில் 8½ அடி பாம்பு சிக்கியது.

சென்னிமலை தினசரி மார்க்கெட் அருகே உள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டி காலி இடம் உள்ளது. இந்த காலி இடத்திற்கு கடந்த ஒரு வாரமாக சாரைப்பாம்பு ஒன்று வந்து சுற்றி கொண்டு இருந்தது.

 இந்த பாம்பு தினமும் வந்து சென்றதால் சென்னிமலை பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் என்.இளங்கோவன் ஈரோட்டில் உள்ள பாம்பு பிடி வீரர் யுவராஜூக்கு தகவல் கொடுத்தார். 

அதைத்தொடர்ந்து யுவராஜ் வந்து பாம்பை தேடியபோது அங்குள்ள மதில் சுவருக்குள் பாம்பு பதுங்கி விட்டது. பின்னர் ஜே.சி.பி. உதவியுடன் மதில் சுவரை உடைத்து சுமார் 8½ அடி நீளமுள்ள சாரைப்பாம்பை யுவராஜ் உயிரோடு பிடித்தார்.

 பின்னர் அந்த பாம்பை வனப்பகுதிக்குள் விட கொண்டு செல்லப்பட்டது.

Similar News