உள்ளூர் செய்திகள்
வேனில் கடத்திய 3½ டன் ரேசன் அரிசி சிக்கியது
கோபிசெட்டிபாளையம் அருகே வேனில் கடத்திய 3½ டன் ரேசன் அரிசி சிக்கியது. இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே வேனில் கடத்திய 3½ டன் ரேசன் அரிசி சிக்கியது. இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள.
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பழனிகவுண்டன் புதூர் பகுதியில் கடத்துர் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது வேனை ஓட்டி வந்த எலத்தூர் செட்டி பாளையம் பகுதியை சேர்ந்த பிரசாத் (24) என்பவரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனை சோதனை செய்தனர்.
அப்போது அதில் 3½ டன்ரேசன் அரிசி கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து கடத்தூர் போலீசார் ரேசன் அரிசி மற்றும் பிரசாத்தை உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் பிரசாத்தை கைது செய்து ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த அரிசி எங்கு இருந்து யாருக்கு கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.