உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மும்பை அழகியிடம் பணம் பறித்த சென்னை ரவுடிக்கும்பல்

Published On 2022-04-28 15:12 IST   |   Update On 2022-04-28 15:12:00 IST
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் மும்பையை சேர்ந்த அழகியிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு அவரது செல்போன், பணம் ஆகியவற்றை ரவுடி கும்பல் பறித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரம்:

மும்பையில் இருந்து விமானத்தில் அழகியை வரவழைத்து லாட்ஜில் அறை எடுத்து தங்கிய சென்னை ரவுடிகளான ராஜேஸ் தீனதயாளன், விஸ்வநாதன் ஆகிய 3 பேரும் அவருடன் விடிய விடிய உல்லாசம் அனுபவித்து விட்டு பணம் கொடுக்காமல் செக்ஸ் மோசடியில் ஈடுபட்டனர்.

பின்னர் 3 ரவுடிகளும் மும்பை அழகியை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை அழகி ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தார். பின்னர் இது பற்றி மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ், தீனதயாளன், விஸ்வநாதன் ஆகிய 3 ரவுடி களையும் கைது செய்தனர்.

மும்பை அழகியின் செல்போன் மற்றும் ரவுடிகளின் செல்போன் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ‘செக்ஸ் ஆப்’ மூலம் ரவுடிகள் அழகியை தொடர்பு கொண்டு பேசி இருப்பது அம்பலமானது. இதனால் ரவுடிகள் 3 பேரும் இதுபோன்று மேலும் பல பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்து இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கைதான ரவுடிகளிடம் இருந்த 2 பெரிய அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.

ரவுடிகள் பறித்துச் சென்ற செல்போனில் தான் அழகி மும்பை செல்வதற்கான டிக்கெட்டும் இருந்துள்ளது. இதையடுத்து செல்போனில் இருந்த டிக்கெட் மூலம் அழகியை போலீசார் மும்பைக்கு அனுப்பி வைத்தனர்.

ரவுடி கும்பலின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News