உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தி.மு.க. சார்பில் நிதி உதவி அறிவிப்பு

Published On 2022-04-27 12:55 IST   |   Update On 2022-04-27 12:56:00 IST
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு தி.மு.க. சார்பில் மொத்தம் ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இம்மின் விபத்தில் இறந்த 11 குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் வீதமும்; காயமடைந்த 14 பேர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News