உள்ளூர் செய்திகள்
மரணம்

கரூர் அருகே தனியார் குவாரியில் லாரி மீது 40 டன் பாறை விழுந்து டிரைவர் பலி- மேலும் 2 பேர் கதி என்ன?

Published On 2022-04-25 05:49 GMT   |   Update On 2022-04-25 05:49 GMT
கரூர் அருகே தனியார் குவாரியில் லாரி மீது 40 டன் பாறை விழுந்து டிரைவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்:

கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியில் ஏராளமான தனியாருக்கு சொந்தமான கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் பல ஆயிரம் டன் கற்கள் வெட்டியும், உடைத்தும் எடுக்கப்பட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கட்டிட பணிக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை அதளபாதாளத்தில் இருந்து உடைக்கப்பட்ட கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மேலே வந்து கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் மேல் பகுதியில் இருந்து சுமார் 40 டன் எடை கொண்ட மிகப்பெரிய பாறை ஒன்று உடைந்து லாரி மீது விழுந்தது.

இதில் அந்த லாரி அப்பளம் போல் நொறுங்கியது மேலும் அந்த லாரியின் டிரைவரான சுப்பையா என்பவர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுகக்குள் சிக்கி பலியானார். மேலும் குவாரியின் கீழ் பகுதியில் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஜே.சி.பி. எந்திரங்களும் பலத்த சேதம் அடைந்தன.

அதில் இருந்த ஜே.சி.பி. டிரைவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல் உடனடியாக கிடைக்கவில்லை. அவர்களை மீட்கும் பணியில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News