உள்ளூர் செய்திகள்
30 பேருக்கு பணிநியமண ஆணை வழங்கிய கலெக்டர்
பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடை பெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் கிறிஸ்டியன் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
இதில் 50க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெற்றனர். நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது,தமிழ்நாடு முதலமைச்சர் தகுதியுடைய அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில்
அனைத்து மாவட்டங்களிலும் தனியார் துறைசார்ந்த வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளதின் அடிப்படையில் நமது மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.
இன்று பணிநியமன ஆணை பெறும் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் பணியாற்றி உங்கள் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகின்றேன் என்றார்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது:-
படித்த இளைஞர்களுக்கு அவர்களின் படிப்பிற்கேற்ப பணி கிடைக்க வேண்டும், என்ற எண்ணத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்பபு முகாம் நடைபெறுகின்றது.
இந்த முகாமில் கிடைக்கும் பணியினை உங்கள் வெற்றிப்பாதையின் தொடக்கப்புள்ளியாக நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடக்க உள்ள பாதைக்கான கடவுச்சீட்டாக இந்த பணிவாய்ப்பை நினைத்துக்கொள்ளுங்கள்.
வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் அமையும்போது உங்கள் திறமையினை மெருகேற்றிக்கொண்டு மேலும் மேலும் நீங்கள் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகின்றேன் என்றார்.
நிகழ்ச்சியில் 30 நபர்களுக்கு முதற்கட்டமாக கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பணிநியமன ஆணைகளை வழங்கினார்.