உள்ளூர் செய்திகள்
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-23 15:31 IST   |   Update On 2022-04-23 15:31:00 IST
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
செங்கம்:

செங்கத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் மாநிலம் தழுவிய வட்டத் தலைநகர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

செங்கம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ராஜன், ராஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

வட்ட செயலாளர் பத்மநாபமூர்த்தி ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விளக்கவுரை அளித்தார்.
 
இதில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் பொருளாளர் அ.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

Similar News