உள்ளூர் செய்திகள்
விஷ்ணுபிரசாத் எம்.பி. ஆய்வு செய்த காட்சி.

ரெயில்வே சுரங்க பாதை ரூ.5 கோடியில் சீரமைக்கப்படும்

Published On 2022-04-22 17:41 IST   |   Update On 2022-04-22 17:41:00 IST
ரெயில்வே சுரங்க பாதை ரூ.5 கோடியில் சீரமைக்கபடும் என ஆரணி எம்.பி உறுதியளித்தார்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அம்மபாளையம் என்ற அப்பநல்லூர் கிராமத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2கோடி மதிப்பீட்டில் சுரங்கபாதை கட்டபட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையாலும் சுரங்கபாதை அருகில் உள்ள அம்மாபாளையம் கல் ஏரி என அழைக்கபடும் ஏரி நீர்வரத்து கால்வாய் ஊற்று தண்ணீர் சுரங்கபாதையில் தேங்கி வருவதால் பொதுமக்கள் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனம் செல்ல முடியாமல் சுரங்கபாதை துண்டிக்கபட்டன.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் ரெயில்வே தண்டவாளத்தில் கடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளன.
தற்போது இது சம்மந்தமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய அரசுக்கு அம்மாபாளையம் கிராம பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

இதன் எதிரொலியாக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணுபிரசாத் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் அம்மாபாளையம் ரெயில்வே சுரங்கபாதை நேரில் சென்று பார்வையிட்டனர்.

 ரெயில்வே துறை மூலம் சுமார் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சரி செய்து விரைவில் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் முன்னாள் எம்.எல்.ஏ சிவானந்தம் கண்ணமங்கலம் சேர்மன் மகாலட்சுமி, ஆரணி நகராட்சி தலைவர் ஏ.சி.மணி, கண்ணமங்கலம் நகர செயலாளர் கோவர்தன், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் பிரசாத், மாவட்ட துணை தலைவர் அருணகிரி, 

நகர தலைவர் ஜெயவேல், மாவட்ட ஆதிதிராவிட பிரிவு தலைவர் சேகர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பழகன் தட்சிணாமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரவி, ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன்,

ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சச்சிதானந்தம், ரெயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News