உள்ளூர் செய்திகள்
வேலூர் கோட்டை அகழியில் செத்து மிதக்கும் மீன்கள் படகு மூலம் அகற்றம்
வேலூர் கோட்டை அகழியில் செத்து மிதக்கும் மீன்கள் படகு மூலம் அகற்றப்பட்டது.
வேலூர்:
வேலூர் கோட்டை133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையை சுற்றிலும் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் வற்றாத தண்ணீரை கொண்டுள்ளது.
இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் அகழிநிரம்பி அதில் இருந்து உபரி நீர் வெளியேறி ஜலகண் டேஸ்வரர் கோவிலுக்குள் புகுந்தது.
இதனால் சில நாட்கள் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தண்ணீர் மோட்டார் மூலம் அகற்றப்பட்டது.தற்போது அகழியில் நீர் மட்டம் குறைந்த காரணத்தினால் கோவிலுக்குள் புகுந்த தண்ணீரும் வெளியேறியது.
வேலூரில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக கோட்டை அகழியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன.
ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் அகழியில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
தொல்பொருள் துறை அதிகாரிகள் அகழியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற ஏற்பாடு செய்தனர்.அதன்படி இன்று படகு மூலம் ஊழியர்கள் அகழியில் செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் இன்று காலை முதல் மாலை வரை செத்து மிதந்த மீன்கள் அகற்றும் பணி நடந்தது.