உள்ளூர் செய்திகள்
குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்களிடம் தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு
குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்களிடம் தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு மீட்புப் பணி தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு ஒரு வார காலமாக குடியாத்தத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தொழிற் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு துறையினர் தீ பாதுகாப்பை அறிவோம்-உற்பத்தியை அதிகரிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.
குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் நேற்று குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் தீ தடுப்பு பாதுகாப்பு மற்றும் உயிர் மீட்புகள் பற்றிய விரிவான விளக்கமும், செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், தீயணைப்புத்துறை வீரர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.