உள்ளூர் செய்திகள்
குடியாத்தத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம்
குடியாத்தத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குடியாத்தம்:
குடியாத்தம் நகர காவல்நிலையத்தில் குடியாத்தம் துணை கோட்ட காவல்துறையினருக்கான பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் நிர்மலா, செந்தில்குமாரி, ராஜன்பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், குமரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆலோசனை கூட்டத்தில் குடியாத்தம் துணை கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் சீண்டல்கள், பெண்களுக்கு எதிரான கேலி கிண்டல் குறித்து போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்ததால் உடனடியாக அந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பெண்-களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.