உள்ளூர் செய்திகள்
பெற்றோர் மீது நாட்டு வெடி வீச முயன்ற வாலிபர் கைது
பெற்றோர் மீது நாட்டு வெடி வீச முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ் மகன் தனபால் (வயது24). டூவீர் மெக்கானிக் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒரு தலை-பட்சமாக காதலித்து கேலி கிண்டல் செய்து வந்துள்ளார். இது பற்றி அறிந்த மாணவியின் தந்தை ஏழு-மலை தனபாலை கண்டித்-துள்ளார்.
இந்நிலையில் தனபால் நேற்று இரவு மாணவியின் வீட்டின் அருகே தொடர்ந்து நடந்து போவதும் வருவதுமாக இருந்துள்ளார்.
இதனைப் பார்த்த ஏழுமலை தனபாலை தாக்கியுள்ளார். அதனை தொடர்ந்து ஏழுமலையும், அவரது அண்ணன் திருமலையும் தனபால் வீட்டிற்கு சென்று கேட்ட போது வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடியை மேலே தூக்கி வீச முயன்றார்.அதனை தனபால் தம்பி நந்தக்குமார் (19) என்பவர் தடுத்துள்ளார்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனபாலை கைது செய்து அவரிடமிருந்து 23 நாட்டு வெடிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். ஒரு தலை காதல் விவகாரத்-தில் தட்டி கேட்ட பெற்றோர் மீது நாட்டு வெடி வீச முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பர-பரப்பை ஏற்படுத்-தியுள்ளது.