உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பள்ளி சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

Published On 2022-04-19 15:36 IST   |   Update On 2022-04-19 15:36:00 IST
பள்ளி சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அரியலூர் :

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஜி கே எம் நகரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு செல்லும் சிமெண்ட் சாலையை முற்றிலுமாக நெல் கொள்முதல் நிலையம் நெல் மூட்டைகளை அடுக்கி  சாலையை முற்றிலுமா ஆக்கிரமிப்பு செய்துள்ளது.

இதனால் பள்ளிக்கு செல்லும் சிறார்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பள்ளிக்கு மாற்றுப்பாதையில் செல்ல வேண்டி உள்ளது. மேலும் பள்ளிக்கு அருகிலேயே டாஸ்மாக் கடை இருப்பதால், மது பிரியர்கள்,

மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை பள்ளிக்கு செல்லும் பாதையிலேயே போட்டு விட்டு செல்வதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அச்சமடைகின்றனர்.  எனவே அரியலூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பள்ளிக்கு செல்லும் பாதையை ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை சரி செய்யும்படியும்,

டாஸ்மார் கடையைவேறு இடத்திற்கு மாற்றகோரியும் பொதுமக்கள் பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையை ஆக்ரமிப்பு செய்திருப்பதை படத்தில்கானலாம்.

Similar News