உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

இலவச கண் சிகிச்சை முகாம்

Published On 2022-04-19 15:32 IST   |   Update On 2022-04-19 15:32:00 IST
இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் விளந்தை கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பரப்ரம்மம் கிளப்ஸ் இண்டர்நேஷனல், அருணா சில்க்ஸ், ஸ்ரீ ஐய்யனார் ஏஜென்சிஸ், ஜோதி ரேடியோஸ் சோனா என்டர்பிரைசஸ், கேஎஸ்ஆர் டையரி ஃபார்ம் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் இந்த இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.


ஸ்ரீ ஐய்யனார் ஏஜென்சிஸ் உரிமையாளர் தர்மதுரை வரவேற்றார். அருணா சில்க்ஸ் உரிமையாளர் சாமிநாதன் தலைமை தாங்கினார். முகாமினை பரப்ரம்மம் பவுண்டேஷன் & கிளப்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனர் முத்துக்குமரன் துவக்கி வைத்தார்.

பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவர்கள் குணால், சௌந்தர்யா, ஹர்ஷா, சிவராஜ், பிரபு மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் திருவேங்கடம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி மாணவிகள் ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

முகாமில் 350 புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .84 நோயாளிகளுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்பட்டது. ஊர் முக்கியஸ்தர்கள் குரு முருகன்,

சுந்தரவடிவேல், வெங்கடேசன், விக்னேஷ், சத்யராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச்சங்கம் கண்ணொளி திட்ட ஆப்டோமெட்ரிஸ்ட் கலைமதி நன்றி கூறினார்.

Similar News