உள்ளூர் செய்திகள்
வனத்துறை அதிகாரி தாக்குதல்

வனத்துறை அதிகாரி மீது தாக்குதல்

Published On 2022-04-16 15:32 IST   |   Update On 2022-04-16 15:32:00 IST
வத்திராயிருப்பு அருகே வனத்துறை அதிகாரியை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்தில் வனவராக கூடலிங்கம் என்பவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் அத்திகோவில் கான்சாபுரம் பீட்-1 மற்றும் பிட்-2 இணைப்பு பகுதிகளில் வனவர் கூடலிங்கம் மற்றும் அவருடன் சேர்ந்து வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து வந்தனர். 

அப்போது சித்தாறில் ராமசாமியாபுரம் பஞ்சாயத்துபோர்டு தெருவை சேர்ந்த பெரியசாமி, கருப்பசாமி மற்றும் அதே தெருவைச் சேர்ந்த 6பேர் கையில் வைத்து மது அருந்தி கொண்டிருந்ததாகவும், அவர்களிடம்  வனவர் கூடலிங்கம் அரசு காப்பு காட்டிற்குள் மது அருந்தக்கூடாது எனக்கூறி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்தபோதுபெரியசாமி, கருப்புசாமி உட்பட 6 பேர் சேர்ந்து வனத்துறை அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், வனவர் கூடலிங்கத்திற்கு கொலைமிரட்டல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து கூடலிங்கம் கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Similar News