உள்ளூர் செய்திகள்
பொன்.ராதாகிருஷ்ணன்

மோடியை புகழ்ந்ததால் இளையராஜாவை கொச்சைப்படுத்துவதா?- பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

Published On 2022-04-16 06:47 GMT   |   Update On 2022-04-16 06:47 GMT
துயரங்களை அனுபவித்து அவற்றை கடந்து தானும் முன்வந்து தன் மக்களையும் முன்னேற்றியவர்களை நன்றியுடன் பார்ப்பது நல்லவர்களின் குணம் என முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை:

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இசைஞானி இளையராஜாவை ஒரு இசையமைப்பாளராக கவிஞராக, பாடகராக ஆன்மீகச் செம்மலாகவே இதுவரை கண்டுள்ளேன். தற்போது புளூகிராப்ட் டிஜிட்டல் பவுண்டேசன் வெளியிட்டுள்ள அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு இளையராஜா எழுதியுள்ள முன்னுரையை படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அதன் முதல் பத்தியிலேயே அம்பேத்கரைப்பற்றி அவர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் நெஞ்சைத்தொட்டன.

சமுதாயத்தில் அடிமட்டத்தில் புறந்தள்ளப்பட்ட மக்களின் மானம் காக்க அம்பேத்கர் போராடியதை நாம் அனைவரும் போற்றுகிறோம். அம்கேத்கரின் வழி நின்று அனைத்து வீடுகளுக்கும் கழிவறை கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற உன்னததிட்டம் கொண்டு வந்து ஏழை ஏளியவரின் மானம் காக்க அம்பேத்கர் உழைத்ததின் முக்கிய வி‌ஷயத்தை பிரதமர் மோடி நனவாக்கியதை நாம் போற்றித்தான் ஆகவேண்டும் என்பன போன்ற அம்பேத்கர் கனவுகளையும் அதை பிரதமர் மோடி நடைமுறைப்படுத்தியதையும் இதில் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

துயரங்களை அனுபவித்து அவற்றை கடந்து தானும் முன்வந்து தன் மக்களையும் முன்னேற்றியவர்களை நன்றியுடன் பார்ப்பது நல்லவர்களின் குணம். காலத்தால் செய்த உதவி ஞாலத்தின் மானப்பெரிது என்றும் எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு என்று எழுதிய நம் ஐயன் வள்ளுவரின் வரிகளை படித்தவர்களும் புரிந்தவர்களும் அம்பேத்கர் அவர்களையும் பிரதமர் மோடி அவர்களையும் என்றும் மறக்கமாட்டார்கள். அந்த நன்றிவுணர்வுடன் முன்னுரையை எழுதிய இசைஞானியையும் போற்றத் தவறமாட்டார்கள்.

இளையராஜாவின் முன்னுரையை களங்கப்படுத்தி கொச்சைப்படுத்துவோரை காணும்போது யானைதன் தலையில் தானே-வாரி போட்டுக் கொண்டது தான் நினைவுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News