உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

காஞ்சிபுரம் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்-கட்டுனர் பணியிடங்களை நிரப்ப வெளியிட்ட அறிவிப்பு ரத்து

Published On 2022-04-13 17:23 IST   |   Update On 2022-04-13 17:23:00 IST
காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலம் 20.06.2020 அன்று காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

காஞ்சிபுரம், ஏப்.13-

காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளரும் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவருமான லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மண்டலத்திலுள்ள (காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அடங்கியது) கூட்டுறவு நிறுவனங்களில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 126 விற்பனையாளர் மற்றும் 64 கட்டுநர் பணியிடங்களுக்கும் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மண்டலம் மூலம் கடந்த 20.06.2020 தேதியில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 10.12.2020 முதல் 24.12.2020 வரையில் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த 25.08.2021 அன்று நடந்த கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின் போது கூட்டுறவுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட அறிவிப்பு மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகள் ஆகியவற்றினை செயல்படுத்தும் விதமாக 2020ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலம் 20.06.2020 அன்று காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Similar News