உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

அம்பேத்கர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை அணிவித்து மரியாதை

Published On 2022-04-13 07:33 GMT   |   Update On 2022-04-13 10:12 GMT
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு முதலமைச்சர் நாளை தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
சென்னை:

அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (14-ந் தேதி) காலை தமிழக அரசின் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.


Tags:    

Similar News