உள்ளூர் செய்திகள்
தங்க நகைகள்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்வு

Published On 2022-04-13 11:40 IST   |   Update On 2022-04-13 13:18:00 IST
தங்கம் விலை இன்று ஒரேநாளில் பவுனுக்கு ரூ.320 அதிகரித்து உள்ளது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.4947-ல் இருந்து ரூ.4,987 ஆக விற்பனையாகிறது.
சென்னை:

கடந்த 45 நாட்களுக்கு முன்பு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததன் காரணமாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டி நகை வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

உக்ரைன் போர் நீடித்ததால் தங்கம் விலை மேலும் உயரும் என அஞ்சப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக விலை படிப்படியாக இறங்கியது.

அதன் பிறகு தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. 4-ந் தேதி பவுன் ரூ.38,480 ஆக இருந்த தங்கத்தின் விலை இன்று ரூ.39,896 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று ரூ.39,576 ஆக விற்பனை ஆன தங்கம் இன்று ஒரேநாளில் பவுனுக்கு ரூ.320 அதிகரித்து உள்ளது. கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.4947-ல் இருந்து ரூ.4,987 ஆக அதிகரித்து இருக்கிறது.

கடந்த 10 நாட்களில் பவுன் மொத்தம் ரூ.1,416 அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்து.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.72.70-ல் இருந்து ரூ.73.80 ஆகவும், கிலோ ரூ.72,700-ல் இருந்து ரூ.73,800 ஆக உயர்ந்து உள்ளது.


Similar News