உள்ளூர் செய்திகள்
அசோக்நகரில் கடையில் விளம்பர போர்டு வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
அசோக்நகரில் கடையில் விளம்பர போர்டு வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள மோட்டார் பம்ப் நிறுவனத்தில் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 37). வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஊழியர் ஜெயச்சந்திரன் என்பவருடன் சேர்ந்து நேற்று மாலை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ஆண்டாள் நகரில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையின் மேல் பகுதியில் விளம்பர போர்டு வைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக விளம்பர போர்டு சரிந்து விழுந்து மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கேபிள் மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தினேசும், ஜெயச்சந்திரனும் தூக்கி வீசப்பட்டனர். உடல் கருகிய டிரைவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயத்துடன் ஜெயச்சந்திரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.