உள்ளூர் செய்திகள்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் இந்தியை நுழைய விடமாட்டோம்- ஜெயக்குமார் பேட்டி

Published On 2022-04-11 08:11 GMT   |   Update On 2022-04-11 08:11 GMT
தி.மு.க ஆட்சியில் பேசப்படும் திராவிட மாடல் மக்களை ஏமாற்றும் செயலாகும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னை:

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சொத்து வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைக்கு மட்டுமே இடம் உண்டு. மும்மொழிக் கொள்கைக்கு இடம் இல்லை. உலகத்தின் முன்னோடி மொழியாக தமிழ் இருக்க தமிழகத்தில் இந்தி மொழியை எந்தவிதத்திலும் நுழைய விடமாட்டோம். தமிழ் மொழி அனைத்து மொழிகளையும் விட மூத்த மொழி. எனவேதான் பிரதமர் மோடியே தமிழ் மொழியின் பெருமைகளை சுட்டிக்காட்டி வருகிறார்.

ஏ.ஆர்.ரகுமான் கூறியது போல தமிழே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் பேசப்படும் திராவிட மாடல் மக்களை ஏமாற்றும் செயலாகும். உள்ளாட்சி பிரதிநிதிகளின் தவறான நடவடிக்கையால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது‌. அ.தி.மு.க ஆட்சியில் வெளிப்படை தன்மையுடன் இருந்த டெண்டர் முறை இப்போது இல்லை. கரூரில் போடாத சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.’

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News