உள்ளூர் செய்திகள்
போரூர் அருகே கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தர்மன்.இவர் அதே பகுதி பூந்தமல்லி சாலையில் நடந்த சென்ற போது ஆட்டோவில் வந்த மர்ம வாலிபர் செல்போனை பறித்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தியபோது, செல்போன் பறித்து தப்பியது திருமழிசை பகுதியை சேர்ந்த பிரபல வழிப்பறி திருடன் ஜான்பால் என்கிற கருப்பு என்பது தெரிந்தது. அவனை போலீசார் கைது செய்தனர். அவன் மீது ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.