உள்ளூர் செய்திகள்
அதிமுக

சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-05 16:38 IST   |   Update On 2022-04-05 16:38:00 IST
சொத்து வரி உயர்த்திய தமிழக அரசைக் கண்டித்து கடலூரில் அ.தி.மு.க சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:

சொத்து வரி உயர்த்திய தமிழக அரசைக் கண்டித்து கடலூரில் அ.தி.மு.க சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார்.

அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன், மாவட்ட கழக செயலாளர் பாண்டியன் எம்எல்ஏ, அமைப்புச் செயலாளர் முருகுமாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல் குமார், முன்னாள் அமைச்சர்கள் தாமோதரன், செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ சிவசுப்பிரமணியன், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சீனிவாச ராஜா, மீனவர் அணி தங்கமணி, பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், மாவட்ட இணை செயலாளர் உமா மகேஸ்வரி பாலகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் பாலகிருஷ்ணன், எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் கெமிக்கல் மாதவன், வர்த்தக அணி செயலாளர் வரதராஜன், மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஜி.எம்.வினோத், இலக்கிய அணி ஏழுமலை, இணைச் செயலாளர் முத்து, தகவல் தொழில் நுட்ப அணி வெங்கட்ராமன், மாவட்ட அ.தி.மு.க. இணைசெயலாளர் பத்திரக்கோட்டை கல்யாணசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் என்ஜினியர் கலையரசன், அ.தி.மு.க. தகவல்தொழில் நுட்ப பிரிவு கோவை மண்டல துணைத்தலைவர் சத்திரம் எஸ்.வி.ராதாகிருஷ்ணன், பண்ருட்டிநகர மன்ற எதிர்க்கட்சித் தலைவர் மோகன், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் என்.டி.கந்தன், அண்ணா தொழிற் சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News