உள்ளூர் செய்திகள்
மாயம்

பண்ருட்டி அருகே இளம்பெண் மாயம்

Published On 2022-04-05 16:08 IST   |   Update On 2022-04-05 16:08:00 IST
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இளம்பெண் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

கடலூர் தாலுக்கா தொண்டமாநத்தம் நாயுடு தெரு ரகு. அவரது மகள் ரம்யா (வயது19), இவர் பண்ருட்டி அருகே வேககொல்லை பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.

இவர் கடந்த 4-ந்தேதிகாணவில்லை என்றும் கண்டுபிடித்து தருமாறு இவரது பாட்டி காடாம்புலியூர் போலீசில்புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News