உள்ளூர் செய்திகள்
ஜெயலலிதா

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை- ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் இன்று ஆஜர்

Published On 2022-04-05 09:21 GMT   |   Update On 2022-04-05 09:21 GMT
அப்பல்லோ டாக்டர்களிடம் நடத்தப்படும் விசாரணை இறுதி விசாரணையாக இருக்கும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஜெயலலிதா மரணம் விசாரணை விரைவில் முடிவுக்கு வர உள்ளது.
சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.

இந்த நிலையில் அப்பல்லோ டாக்டர்கள் 2 பேர் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜரானார்கள். செந்தில் குமார், தவபழனி ஆகிய 2 டாக்டர்களும் விசாரணைக்கு ஆஜரான நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்பல்லோ டாக்டர்கள் 9 பேருக்கு ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 2 பேர் இன்று காலையில் ஆஜராகி இருக்கிறார்கள். பிற்பகலில் மேலும் சில டாக்டர்கள் ஆஜராக உள்ளனர்.

நாளையும், நாளை மறுநாளும் அப்பல்லோ டாக்டர்களிடமே விசாரணை நடத்தப்படுகிறது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஜரானார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அப்பல்லோ டாக்டர்களிடம் நடத்தப்படும் விசாரணை இறுதி விசாரணையாக இருக்கும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஜெயலலிதா மரணம் விசாரணை விரைவில் முடிவுக்கு வர உள்ளது.
Tags:    

Similar News