உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

Published On 2022-04-05 06:18 GMT   |   Update On 2022-04-05 06:18 GMT
திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் தொழில் பழகுனருக்கான சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
திண்டுக்கல்:

இந்திய அரசு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் இயக்குநரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக, திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் திண்டுக்கல், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டியில்¢ அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகிற 21ந் தேதி நடைபெறுகிறது.
 
இம்முகாமில் திண்டுக்கல் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான தொழிற்பிரிவுகளில் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க, பயிற்சியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

  இதில் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள்¢ கலந்து கொண்டு பயன்பெறலாம். தற்போது தொழில் பழகுநராக சேர்க்கை செய்யப் படும் பயிற்சியாளர் களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ.8,000 வழங்கப்படும்.

எனவே, இதுவரை தொழில் பழகுநர் பயிற்சி முடிக்காத அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள்¢  அனைவரும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், விபரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News