உள்ளூர் செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகை- பாதுகாப்பு பணிக்காக சென்ற கடலூர் மாவட்ட போலீசார்
முதல்வர் வருகையையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் 500 போலீசார் கடலூர் மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அரசு விழாவுக்காக இன்று மாலை வருகிறார். நாளை (5-ந் தேதி) நடைபெறும் அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்க உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மற்றும் தி.மு.க.வினர் விழா ஏற்பாடுகளை செய்து உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
முதல்வர் வருகையையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கூடுதல் சூப்பிரண்டுகள், போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 500 போலீசார் கடலூர் மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.