உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி அருகே தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து நாசம்
திட்டக்குடி அருகே தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவரது கூரை வீட்டில் திடீர் என தீ பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் அருகில் உள்ள மாணிக்கம் வீட்டிலும் தீ பற்றியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டனர். அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீயின் வேகம் குறையவில்லை.
இதுபற்றி உடனடியாக திட்டக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்த தீயை அணைத்தனர். என்றாலும் 2 வீடுகள் தீயில் எரிந்து நாசமானது.
விபத்து பற்றி திட்டக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். அவர்கள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.