உள்ளூர் செய்திகள்
மணக்குள விநாயகர் கலை அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட காட்சி.

மணக்குள விநாயகர் கலை அறிவியல் கல்லூரி தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published On 2022-04-03 14:22 IST   |   Update On 2022-04-03 14:22:00 IST
மணக்குள விநாயகர் கலை அறிவியல் கல்லூரி தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது-.
புதுச்சேரி:

மதகடிப்பட்டு மணக்குள விநாயகர்  என்ஜினீயரிங் கல்லூரியின் அங்கமான கலை மற்றும் அறிவியல் பிரிவின் வேதியியல் துறையும், தர்மபுரி பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான ஸ்ரீலக் பெயிண்ட்ஸ் இணைந்து மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உரு வாக்கும் வகையில் புரிந் துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழில்துறை பயிற்சி நடைபெற்றது. 

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லூரி முதல்வர் வெங்கடாசலபதி, பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார்,  அகாடமிக் டீன் அன்புமலர், கலை மற்றும் அறிவியல் கல்லூரி டீன் முத்துலட்சுமி, கல்லூரி ஆராய்ச்சிதுறை டீன் வேல்முருகன், வேலை வாய்ப்பு துறை அதிகாரி கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேதியியல்துறை பேராசிரியர் சாவித்ரி வரவேற்று பேசினார். தொழில்துறை பயிற்சியாளர் சீனிவாசன் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை எடுத்துரைத்தார். ஒப்பந்தம் பற்றிய   விவரங்களை வேதியியல் துறை தலைவர் தீபா எடுத்து கூறினார். பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார். 

இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் ராஜப்பா செய்திருந்தார்.

Similar News