உள்ளூர் செய்திகள்
கைது

ஏரியா ‘தாதா’ போட்டியில் அடிக்கடி மோதிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-04-03 13:47 IST   |   Update On 2022-04-03 13:47:00 IST
ஏரியா ‘தாதா’ போட்டியில் அடிக்கடி மோதிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


மாங்காடு காவல் நிலைய பகுதியில் ஏரியா தாதா போட்டியில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு மாங்காடு கங்கை அம்மன் கோயில் தெரு பெரிய கொளுத்துவாஞ்சேரி பகுதியில் வசிக்கும் குரு (எ) குருமூர்த்தி தரப்பும், வீரா தரப்பும் முன்விரோதம் காரணமாக கல், கட்டை கொண்டு அடித்து மோதினர். இதில் குரு மூர்த்தி கத்தியால் வெட்டியதில் வீரா படுகாயம் அடைந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடம் சென்ற மாங்காடு காவல் நிலைய ரோந்து வாகனத்தை கல் மற்றும் கட்டையால் தாக்கி சேதப்படுத்திய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று ஆவடி மாவட்ட காவல் ஆணையாளர் உத்தரவுபடி குரு (எ) குரு மூர்த்தி (விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்) மற்றும் பரத்வாஜ் (இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News