உள்ளூர் செய்திகள்
புதுவை செஞ்சி சாலையில் தொழில் போட்டியில் வியாபாரிகள் மோதிக் கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால் பேட்டை சோலைநகர் மருதம் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் செஞ்சி சாலையில் பொம்மை கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் அருகே அவரது மனைவி மணிமேகலையும் பொம்மை கடை வைத்துள்ளார்.
இதற்கிடையே இவர்க ளுக்கும் அதே பகுதியில் கைவினை பொருட்கள் விற்படை கடை நடத்தி வரும் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் தொழில் போட்டி காரணமாக அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் மீண்டும் இதுதொடர்பாக அவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இரு தரப்பினரும் தடி மற்றும் இரும்பு பைப்பால் தாக்கி கொண்டனர். மேலும் ஒருவருக் கொருவர் கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே பெரியகடை போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.