உள்ளூர் செய்திகள்
அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த விவசாயிகளை போலீசார் விசாரித்த காட்சி.

அரூர் அருகே வனத்துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம்

Published On 2022-04-02 15:36 IST   |   Update On 2022-04-02 15:36:00 IST
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே வனத்துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
தருமபுரி, 

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த ஜங்கல்வாடி கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அரூர் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ஜங்கல்வாடி கிராமத்தில், மொரப்பூர் வனச்சரகத்துக்கு சொந்தமான 28.38.0 ஹெக்டேர் நிலத்தினை அப்பகுதியிலுள்ள விவசாயிகள் சிலர் சுமார் 40 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இந்த நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மொரப்பூர் வனச்சரகர் வழங்கியுள்ள கோரிக்கை மனுவின் அடிப்படையில், வட்டாட்சியர்  உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதியில் நில அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து எம்.தாதம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் ராஜி, சங்கர், முருகன், செந்தில் ஆகியோர் கூறுகையில், அரூரை அடுத்த ஜங்கல்வாடி விவசாயிகள் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தை அனுபவத்தில் வைத்துள்ளனர். இதே பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் விவசாயிகள் பலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால், 4 விவசாயிகளுக்கு மட்டும் பட்டா வழங்காமல், சுமார் 60 ஆண்டுகள் அனுபவத்தில் உள்ள நிலங்களில் ஆக்கிரப்புகளை அகற்றும் பணிகளை வருவாய் மற்றும் வனத்துறையினர் மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Similar News