உள்ளூர் செய்திகள்
மின் கட்டண உயர்வு சட்ட விரோதம்-அ.தி.மு.க.கண்டனம்
அட்டவணை அறிவிப்பில் இல்லாத மின் கட்டண உயர்வு சட்ட விரோதம் என அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கடிதம் அளித்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏப்ரல் 1-ந் தேதியிலிருந்து புதிய மின் கட்டண உயர்வை மின்துறை தற்போது வெளியிட்டுள்ளது. ஜனவரி 13--ந் தேதி வெளியிடப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் 100 யூனிட், 101-200 யூனிட் வரை, மின்சாரம் உபயோகப்படுத்துபவர்களுக்கு மட்டும் கட்டண உயர்வு என அறிவித்து, அது சம்பந்தமாக கருத்து கூறலாம் என தெரிவித்து விட்டு தற்போது 200--300 யூனிட், மின்சாரத்திற்கு மின் கட்டண உயர்வும், வீட்டு உபயோகத்திற்கு பயன் படுத்தப்படும் ஒவ்வொரு கிலோவாட்டுக்கும் மாதம் தோறும் ரூ.30 என 10 மடங்கிற்கு மேல் உயர்த்தி உள்ளது மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
மின் கட்டண உயர்வு சம்பந்தமாக கருத்து கேட்பு அட்டவணை அறிவிப்பில் இல்லாத மின் பயனாளி களுக்கும் கட்டண உயர்வு என்பது சட்டத்திற்கு விரோத மான செயலாகும்.
கட்டண உயர்வின் மூலம் தற்போது உள்ள கட்ட ணத்தை விட இரு மடங்கு கட்டணம் செலுத்தும் சூழ் நிலை ஏற்படும். இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப் படுவர்.
தலைமைச்செயலர், மின் துறை செயலர், மற்றும் மின் துறை உயரதிகாரிகளின் சட்டவிரோதமான தன்னிச்சையான மின் கட்டண உயர்வின் அறிவிப்பினை முதல்-அமைச்சர் ரத்து செய்ய வேண்டும். மின் கட்டண உயர்வு சம்பந்தமாக ஜனவரி மாதத்தில் நடை பெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படாத மின் உபயோக சம்பந்தமான அடுக்கு முறைக்கு, உயர்த்தப் பட்டுள்ள மின் உயர்வு சம்பந்தமாக மீண்டும் பொது மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முதல்& அமைச்சர் உத்தரவிட வேண்டும்.
அதுவரையில் ஒட்டு மொத்தத்தில் சட்டத்திற்கு விரோதமாக உயர்த்தப்பட் டுள்ள மின் கட்டண உயர்வு அட்டவணையை முதல்-அமைச்சர் நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.