உள்ளூர் செய்திகள்
மின்சார ரெயில்

சென்னை கோட்டத்தில் 95 சதவீத ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்கம்

Published On 2022-04-01 03:59 GMT   |   Update On 2022-04-01 03:59 GMT
சென்னை கோட்டத்தில் மின்சார ரெயில் சேவைகளின் ஒரு மாத கால நேரத்தரவுகளை பார்க்கும்போது, பறக்கும் ரெயில் சேவைகள் சரியான நேரத்தில் இயக்கப்படுவது அதிகபட்சமாக 99.96 சதவீதம் ஆக உள்ளது.
சென்னை:

மின்சார ரெயில்களில் பொதுமக்கள் பயணிக்க விதிக்கப்பட்டிருந்த அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நீக்கப்பட்டதில் இருந்து, கடந்த ஒரு மாதத்தில் மின்சார ரெயில்கள் நேர அட்டவணைப்படி சரியான நேரத்தில் இயக்கப்படுவது 95 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அந்தவகையில், சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரெயில்கள் (எம்.ஆர்.டி.எஸ்.) கிட்டத்தட்ட 100 சதவீதம் திட்டமிடப்பட்ட நேரத்தில் இயக்கப்பட்டுள்ளது.

சென்னை கோட்டத்தில் மின்சார ரெயில் சேவைகளின் ஒரு மாத கால நேரத்தரவுகளை பார்க்கும்போது, பறக்கும் ரெயில் சேவைகள் சரியான நேரத்தில் இயக்கப்படுவது அதிகபட்சமாக 99.96 சதவீதம் ஆக உள்ளது. அதைத்தொடர்ந்து கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவு 96 சதவீதமாக உள்ளன.

கும்மிடிப்பூண்டி வழித்தடம் 94.20 சதவீதமும் மற்றும் ஆவடி-திருவள்ளூர்-அரக்கோணம்-திருத்தணி வழித்தடம் 92.84 சதவீதம் என்ற அளவில் குறைவாக உள்ளது. சென்னை கோட்டத்தில் 17 ஆயிரத்து 324 ரெயில் சேவைகளில், 16 ஆயிரத்து 481 ரெயில் சேவைகள் நேர அட்டவணைப்படி சரியான நேரத்தில் ரெயில் நிலையங்களை வந்தடைந்துள்ளது. இதன் மூலம் 95.10 சதவீத நேரத்தை எட்டியுள்ளது.

மேற்கண்ட தகவல்கள் சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News