உள்ளூர் செய்திகள்
அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு ரத்த பரிசோதனை முகாம் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

சுகாதார பணிகளை ஆய்வு செய்த நகரசபை தலைவர்

Published On 2022-03-28 15:09 IST   |   Update On 2022-03-28 15:09:00 IST
தேவகோட்டையில் சுகாதார பணிகளை நகரசபை தலைவர் ஆய்வு செய்தார்.
தேவகோட்டை, 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர்பகுதியில் நகர்மன்றத்தலைவர் சுகாதார பணிகளை ஆய்வு செய்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தேவகோட்டை நகராட்சியில் நகர்மன்றதலைவர் சுந்தரலிங்கம் நகரின் முக்கியவீதிகளில் சுகாதாரபணிகளை ஆய்வு செய்தார். கண்டதேவி சாலையில அமைந்துள்ள அகதிகள் முகாமில் மர்ம காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதனையறிந்த நகர்மன்றதலைவர் மருத்துவகுழு மற்றும் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அகதிகள் முகாமிற்கு சென்று அங்குள்ளவர்களிடம் ரத்த பரிசோதனை முகாம் நடத்தி மர்ம காய்ச்சலுக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறார். 

மேலும் நகரில் உள்ள குறைபாடுகள் குறித்து புகார் தெரிவித்தால்  நகர்மன்ற தலைவர் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News