உள்ளூர் செய்திகள்
ஆரணி அருகே 652 நெசவாளர்களுக்கு ரூ.42 லட்சத்தில் நலதிட்ட உதவிகள்
652 நெசவாளர்களுக்கு ரூ.42 லட்சத்தில் நலதிட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அத்திமலைபட்டு கிராமத்தில் அறிஞர் அண்ணா பருத்தி பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகின்றன.
இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
மேலும் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற நெசவாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அத்திமலைபட்டு கூட்டுறவு சங்க செயலாளர் கணேசன் அனைவரையும் வரவேற்றார்.
ஆரணி ஆர்.டி.ஓ. கவிதா, செய்யார் எம்.எல்.ஏ. ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்ட கைத்தறித் துறை இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக அமைச்சர் காந்தி குத்து விளக்கு ஏற்றி வைத்து அறிஞர் அண்ணா கைத்தறி சங்கத்தில் உள்ள பட்டுபுடவைகளை பார்வையிட்டு ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் தொழில் நுட்ப மேம்பாடு கீழ் 40 பயனாளிகளுக்கு ஜக்கார்டு இயக்க எந்திரம் 240 ஊக்குகள் கொண்ட ஜக்கார்டு பெட்டி 90 பயனாளிகளுக்கு நூல் தறி சுற்றும் எந்திரம் 492 பயனாளிகளுக்கு ஜரிகை சுற்றும் எந்திரம் 20 பயனாளிகளுக்கு கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் கடன் உள்ளிட்ட 642பயனாளிகளுக்கு 41லட்சத்து 18ஆயிரம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி நெசவாளர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் தரணி வேந்தன் ஆரணி டவுன் சேர்மேன் ஏ.சி மணி ஒன்றிய சேர்மன்கள் பச்சையம்மாள் சீனிவாசன் கனிமொழி சுந்தர் முன்னாள் எம்எல்ஏக்கள் சிவானந்தம் ஏ.சி தயாநிதி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஞ்சித் அரசு அதிகாரிகள் நெசவாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் துணிநூல் கட்டுப்பாடு அலுவலர் மேலாண்மை இயக்குனர் சத்தியபாமா நன்றி கூறினார்.