உள்ளூர் செய்திகள்
நெடுங்குணம் கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
நெடுங்குணம் கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா நெடுங்குணம் கிராமத்தில் உள்ள ராமச்சந்திர பெருமாள் கோவில் வளாகத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது.
சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பெரணமல்லூர் ஒன்றிய குழுதுணை தலைவர் லட்சுமி லலிதா வேலன் நெடுங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா வேலாயுதம். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் நெடுங்குணம்பிர்கா வருவாய் ஆய்வாளர் ஹேமலதா வரவேற்றார். முகாமில் சிறப்பு அழைப்பாளராக பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன் கலந்து கொண்டார்.
இதில் பட்டா மாற்றம் உட்பிரிவு பட்டா பட்டா பெயர் திருத்தம் புதிய பட்டா உள்ளிட்ட பல்வேறு நில அளவை துறை சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 52 பேர் மனு அளித்தனர்.
இதில் உரிய ஆவணம் உள்ள 12 பயனாளிகளுக்கு உடனடி நலத்திட்ட உதவியாக ஒன்றியக்குழு தலைவர் இந்திரா இளங்கோவன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
முகாமில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை சமூக பாதுகாப்பு தாசில்தார் குமரவேல் மண்டல துணை தாசில்தார் சரவணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நெடுங்குணம் கிராம நிர்வாக அலுவலர் பஷீர் நன்றி கூறினார்.