உள்ளூர் செய்திகள்
சேத்துப்பட்டு அருகே பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது
சேத்துப்பட்டு அருகே பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள பெரணம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வேதமுனி இவரது மனைவி பூங்காவனத்தம்மாள் (வயது 47). அதே பகுதியை சேர்ந்த திருமலை (50) திருமலைக்கு திருமணம் ஆகவில்லை.
சம்பவத்தன்று பூங்காவன த்தம்மாள் பெரணம்பாக்கம் கிராமத்தில் உள்ள பால் சொசைட்டி நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த திருமலை பூங்காவனத்தம்மாளை வழிமறித்து ஆபாச வார்த்தை களால் திட்டி கீழே தள்ளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தி உள்ளார்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் படுகாயமடைந்த பூங்காவனத்தம்மாளை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பூங்காவனத்தம்மாளின் மகன் அகிலன் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து திருமலையை கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.