உள்ளூர் செய்திகள்
கோடியக்கரை கடற்கரையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் கடலில் விடும்பணி

கடலில் விடப்பட்ட ஆலிவ்ரிட்லி ஆமை குஞ்சுகள்

Published On 2022-03-19 09:27 GMT   |   Update On 2022-03-19 09:27 GMT
ஆலிவ்ரிட்லி ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக கோடியக்கரை கடலில் விட்டனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஆலிவ்ரிட்லி ஆமை முட்டைகள் பொரிப்பகம் கோடியக்கரை வனத்துறை மூலம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
 
இந்த ஆண்டு கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறையில் 
132 ஆமைகள் இட்டு சென்ற 14,322 முட்டைகளை வனத்துறையினர் பத்திரமாக எடுத்து முட்டை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வந்தனர். 

அதில் கடந்த வாரம் மூன்று ஆமைகள் இட்ட 313 முட்டைகளிடம் இருந்து வெளிவந்த ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகளை கோடியக்கரை வனத்துறையினர் பாதுகாப்பாக கோடியக்கரை கடலில் விட்டனர்.
 
இன்று 2-வது முறையாக 375 ஆமை குஞ்சுகளை திருச்சி சரக ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வன உயிரின காவலர் யோகேஷ் குமார் மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் கடலில் விட்டனர்.
Tags:    

Similar News