உள்ளூர் செய்திகள்
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால வகுப்பு
திருச்சி அருகே புள்ளம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெற கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை தேசிய கல்விக்கொள்கையின்படி குறுகிய கால பயிற்சி அளிக்கும் மையமாக மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது.
இதனைத்தொடர்ந்து, இந்த நிலையத்தில் குறுகிய கால பயிற்சி அளிக்கும் பொருட்டு தையல் எந்திரம் இயக்குபவர், கையினால் எம்பிராய்டரி செய்பவர் ஆகிய தொழிற் பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சிக்கு 5-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 15 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் சேரலாம்.
கல்லூரி முடித்த அல்லது இடைநின்ற மாணவிகளும் இப்பயிற்சியில் சேரலாம். அரசு மற்றும் தனியார் நிறு வனங்களில் உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் வேலை இல்லாத மேற்காணும் தகுதி உள்ள பெண்களும் இதில் சேர்ந்து பயன்பெறலாம்.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் புள்ளம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை செல்போன் எண்கள்: 94432 77592, 89402 58905 ஆகியற்றில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.