உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் பா.ஜ.கவினர் கொண்டாட்டம்
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
ஊட்டி:
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றது.இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், அதிகரட்டி மற்றும் பல இடங்களில் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி “பாரத் மாதாகி ஜே” என்ற முழக்கத்துடன் கொண்டாடினர்.
ஊட்டியில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையிலும், குன்னூரில் மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன், நகர தலைவர் குங்குமராஜ், வர்த்தக அணி தலைவர் என்.எஸ்.சரவணன் தலைமையிலும் கோத்தகிரியில் மாவட்ட பொதுச் செயலாளர் கே.ஜே.குமார் தலைமையிலும் கொண்டாடப்பட்டது